#BREAKING: பெகாசஸ் – குழு அமைத்து விசாரிக்க நீதிமன்றம் முடிவு..!
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கில் அடுத்த வாரம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு.
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலரது செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் தரக் கோரி அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தை முடக்கின.
இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் தொடர்பாக 9 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. நிபுணர் குழு தொடர்பாக அடுத்த வாரம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.