பெகாஸஸ் விவகாரத்தில், 500-க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வில், இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெகாசஸ் விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், பெகாஸஸ் விவகாரத்தால் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினர் உளவு பார்க்கப்படுகின்றனர்.
மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். அதிகாரம் உள்ளவர்களுக்கு எதிராக பாலியல் புகார் கூற தயங்கும் நிலை ஏற்பட்டுவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற உளவு மென் பொருட்களை வாங்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…