கர்நாடகத்தில் மேலும் 14 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்-சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் அரசுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி கவிழ்ந்தது.
இதனால் எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சி ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து கொண்டு ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.பின் கர்நாடக முதல்வராக எடியூரப்பா 4 வது முறையாக பதவி ஏற்றார்.மேலும் நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார் எடியூரப்பா.
இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் . காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 11 பேர் ,மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் 3 பேரும் தகுதி நீக்கம் செய்தார் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்.ஏற்கெனவே 3 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக ஆனது.தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் 2023 மே 15 வரை தேர்தலில் போட்டியிட முடியாது.கர்நாடகாவில் 17 பேர் தகுதி நீக்கத்தால் 224 எம்எல்ஏக்களை கொண்ட பேரவையின் பலம் 207ஆக குறைந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பேத்தி வேண்டாம்.. பேரன் வேண்டும்” – நடிகர் சிரஞ்சீவியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை.!
February 12, 2025![chiranjeevi - RAM SARAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/chiranjeevi-RAM-SARAN.webp)
பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் காயம்,.. காரணத்தை விளக்கி ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!
February 12, 2025![Bus Accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Bus-Accident-.webp)
சாம்பியன்ஸ் டிராபி வருது இப்படியா பண்ணுவீங்க? ஸ்டோய்னிஸை வறுத்தெடுத்த ஆரோன் பிஞ்ச்!
February 12, 2025![marcus stoinis](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/marcus-stoinis-1.webp)
அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!
February 12, 2025![O. Panneerselvam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/O.-Panneerselvam.webp)
காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!
February 12, 2025![TAMIL MOVIES](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TAMIL-MOVIES.webp)