ஜார்கண்ட் தேர்தலுக்கு வாழ்த்து கூறிய ப.சிதபரத்தின் நம்பிக்கை பலித்தது.!
- ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
- ஜார்கண்ட் தேர்தலுக்கு வாழ்த்து கூறிய ப.சிதபரத்தின் நம்பிக்கை பலித்தது.
ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாஜக தனித்து போட்டியிட்டு பின் தங்கி வருகிறது.
இந்நிலையில், காங். எம்.பி.யான சிதம்பரம் ஜார்கண்ட் தேர்தலுக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் அவரது டுவிட்டர் பக்கத்தில் டிவிட் ஒன்று போட்டுள்ளார், அதில் ஜார்கண்ட் தேர்தல் முடிவுகளை பற்றி நம்பிக்கை தெரிவித்தார். அது நாளைய பொழுது நல்ல பொழுதாக விடியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நம் ஆட்சி அமையும், என்ற நம்பிக்கையுடன் உறங்கப் போகிறேன், என்று பதிவிட்டுருந்தார். அவர் நினைத்தது போலவே இன்று ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் முன்னிலையில் வகிக்கிறது. தற்போது காங். எம்.பி.யான சிதம்பரம் சென்னையில் திமுக கூட்டணி சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டு நடைபெற்று வருகிறது.
நாளைய பொழுது நல்ல பொழுதாக விடியும்,
ஜார்க்கண்ட் மாநிலத்தில்
நம் ஆட்சி அமையும்,
என்ற நம்பிக்கையுடன்
உறங்கப் போகிறேன்— P. Chidambaram (@PChidambaram_IN) December 22, 2019