பேடிஎமில் இப்போது ரயில் நேரலை இருப்பிடத்தைக் கண்காணிக்கலாம்..

இந்தியாவின் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட்ஸ் மற்றும் நிதிச் சேவை தளங்களில் ஒன்றான பேடிஎம், புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது.

பயனர்கள் இப்போது ரயில் வரும் நடைமேடை எண் மற்றும் ரயிலின் நேரலை இருப்பிடத்தையும் சரிபார்க்கலாம் என்றும் பேடிஎம் கூறுகிறது. லைவ் ட்ரெயின் ஸ்டேட்டஸ் அம்சத்துடன், ரயில் பயணத்திற்கான அனைத்து முன்பதிவுக்குப் பிந்தைய தேவைகளையும் பயனர்கள் இப்போது சரிபார்க்க முடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.

பேடிஎம் ஐப் பயன்படுத்துபவர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், PNR மற்றும் ரயில் நிலையைப் பார்க்கலாம், உணவை ஆர்டர் செய்யலாம் மற்றும் 24X7 வாடிக்கையாளர் ஆதரவைப் பெறலாம். இந்த செயலி இந்தி, பங்களா, தெலுங்கு, மராத்தி, தமிழ், குஜராத்தி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, ஒடியா மற்றும் பல மொழிகளில் டிக்கெட் முன்பதிவை வழங்குகிறது. கூடுதல் கட்டணங்கள் அல்லது மறைக்கப்பட்ட செலவுகள் எதுவும் இருக்காது என்று பேடிஎம் நிறுவனம் உறுதியளித்தது.

வாடிக்கையாளர்கள் மூத்த குடிமக்கள் ஒதுக்கீட்டைப் பெறலாம் என்றும் நிறுவனம் உறுதி செய்துள்ளது. 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் பயணிகள் மற்றும் 45 வயதுடைய பெண் பயணிகள் கீழ் பெர்த் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். கூடுதலாக, ஜீரோ பேமென்ட் கேட்வே (பிஜி) கட்டணங்களுடன் UPI மூலம் பணம் செலுத்துதலாம். பேடிஎம் போஸ்ட்பெய்டு உபயோகிப்பவர்கள் உடனடியாக IRCTC மூலம் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பின்னர் தொகையை செலுத்தலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்