தேசிய பெண்கள் ஆணைய தலைவரை சந்தித்த பயல் கோஷ்..!

Default Image

திரைப்படத் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய நடிகை பயல் கோஷ், இந்த வழக்கு தொடர்பாக இன்று டெல்லியில் உள்ள தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மாவை சந்தித்தார்.

இதற்கு முன்,  திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் எதிராக மும்பையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர், அனுராக் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அக்டோபர் 1 -ம் தேதி, அனுராக் காஷ்யப்பை பாலியல் வன்கொடுமை வழக்கில் வெர்சோவா போலீசார் விசாரித்தனர்.

ஒரு நாள் கழித்து அவரது வழக்கறிஞர் பிரியங்கா கிமானி நடிகை பயல் கோஷ் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், பயல் கோஷின் புகார் ஒரு “வெளிப்படையான பொய்”  என்று கிமானி கூறினார்.மேலும்,  2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனுராக் தனது ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக இலங்கையில் இருந்தார் என்பதற்கு ஆவண சான்றுகளை அனுராக் வழங்கியுள்ளார்.

இதுபோன்ற எந்தவொரு சம்பவமும் இதுவரை நடக்கவில்லை என்று அனுராக் திட்டவட்டமாக மறுத்துள்ளார், அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார் ” என்று அனுராக் வழக்கறிஞர் கூறினார்.

இந்த வழக்கு முழுவதையும் மும்பை காவல்துறையினர் நியாயமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக கோஷ் முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்