கடன்களை செலுத்தி விடுகிறேன் , வழக்குகளை முடித்து விடுங்கள் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை தேதி நீதிமன்றம் வழங்கியது.
பின் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு விஜய் மல்லையாவை அனுப்ப பிரிட்டன் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.இதற்குஇடையில் தான் விஜய் மல்லையா இந்தியாவிற்கு நாடு கடத்துவதை எதிர்த்து பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை மீட்டெடுக்க இந்திய அரசு அறிவித்துள்ளதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.இந்தியா தேவைக்கு ஏற்றது போல ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம்.ஆனால் நான் பலமுறை 100% கடனை திரும்ப செலுத்துகிறேன் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன்.ஆனால் அந்த கோரிக்கை புறந்தள்ளப்பட்டு வருகிறது.நான் செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் செலுத்திவிடுகிறேன்.மேலும் என் மீது உள்ள வழக்குகளை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…