பண்டிகை காலங்களில் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – பிரதமர் மோடி

பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல், தற்பொழுது வரை ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி மூலமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவது, போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் அனைவருக்கும் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமன்றி, நோய், நெருப்பு போன்றவற்றை நாம் எளிதாகக் கருதக் கூடாது எனக் கூறிய பிரதமர் மோடி, பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025