மக்களவை தேர்தல்..! வேட்பாளர்கள் பட்டியல் வெளியான அடுத்தநாளே விலகிய பாஜக வேட்பாளர்
BJP: நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று அறிவித்தது.
நட்சத்திர வேட்பாளராக, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்குவங்கம் அசான்சோல் தொகுதியில் பாஜக சார்பில் போஜ்புரி நடிகர் பவன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மேற்குவங்கம் அசான்சோல் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகர் பவன் சிங் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அவர் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
Read More – இந்திய கடற்படை மாலுமி கப்பலில் இருந்து மாயம்! தொடரும் தீவிர தேடுதல் வேட்டை
போஜ்புரி பாடகரான பவன், பெங்காலி பெண்களை ஆபாசமாக சித்தரித்து பாடல்களில் நடித்துள்ளதாக, கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இம்முடிவை எடுத்துள்ளார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சகரிகா கோஷ் உள்ளிட்டோர் பவன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சனங்களை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.