Pawan Kalyan [file image]
பவன் கல்யாண் : ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை கையெழுத்திட்டு தனது பணிகளை தொடங்கினார்.
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சியின் சார்பாக NDA கூட்டணியில் இணைந்து களம் கண்ட நிலையில், பவன்கல்யாணின் ஜனசேனா 21 தொகுதிகளை வென்று பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த பவன் கல்யானுக்கு ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதிவு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரதமர் மோடி என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
அதனை தொடர்ந்து, நேற்று தலைமை செயலகத்திற்கு சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பவன் கல்யாண் தனக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துராஜ் துறைகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த நிலையில், இன்று துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை கையெழுத்திட்டு பவன் கல்யாண் ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்கு தொண்டர்கள் பெரும் ஆதரவை கொடுத்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து செய்திகள் குவிந்து வருகிறது.
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
சென்னை : கோடை காலத்தில் கொளுத்தும் வெயியிலின் தாக்கத்தின் காரணமாக உடல் சூட்டை தணிக்க பொதுமக்கள் தர்பூசணி பழத்தை விரும்பி…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று இலங்கை அரசுடன்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில்…
மும்பை: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட…