சூழ்நிலைக்கு எதிராக சிங்கம் போல் நின்றார் – பவன் கல்யாண் இரங்கல்.!
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X தள பக்கத்தில், பரட்சிக் கலைஞர், தேமுதிக தலைவர் திரு விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
శ్రీ విజయకాంత్ గారి ఆత్మకు శాంతి చేకూరాలి – JanaSena Chief Shri @PawanKalyan #Vijayakanth pic.twitter.com/B86HN7GygX
— JanaSena Party (@JanaSenaParty) December 28, 2023
2005ல் தேமுதிகவை அவர் துவக்கியபோது, நான் மதுரையில் இருந்தேன். அங்குள்ள மக்களிடம் சந்தோஷத்தை நேரடியாக பார்த்தேன். விஜயகாந்த் மக்கள் பக்கம் நிற்கும் விதமும், ஒரு பிரச்சனை வரும் போது. போராடி துணை நிற்கும் விதமும் போற்றத்தக்கது. தனது முதல் அடியில் அவர் சந்தித்த முடிவுகளால் மனம் தளராமல் அரசியலில் நின்றார்.
கேப்டன் விஜயகாந்த் மறைவு! கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த விஷால்!
குழ்நிலைக்கு எதிராக சிங்கம் போல் நின்றார். சினிமாவில் உள்ள சிலர்களால் அவர் அவமானங்களை சத்தித்தாலும் அவர் பின்வாங்கவில்லை. யாருக்கும் அஞ்சாமல் தமிழக சட்டாபையில் எதிர்க்கட்சித் தவைவராக மக்கள் பக்கம் நின்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.