மகளிடம் பிராமண பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய பவன் கல்யாண்.! காரணம் இதுதான்…
மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலுக்கு சென்றால் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற விதி அடிப்படையில் பவன் கல்யாணின் இளைய மகள் கையெழுத்திட்டுள்ளார்.
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கடந்த ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். மேலும், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டின் கொழுப்பு , பன்றி கொழுப்பு ஆகியவை கலந்து இருந்ததாக மாநில ஆய்வு முடிவுகள் என்ற தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை உண்டாக்கின.
இதனை அடுத்து, திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவத்தால், ஏழுமலையானின் புனித தன்மைக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது என்று, அதனை போக்குவதற்கு, தான் விரதம் இருந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளதாக அறிவித்தார் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண்.
இதனை அறிவித்து, கடந்த மாதம் காவி உடையணிந்து விரதம் இருக்க தொடங்கினார் பவன் கல்யாண். அதன் பிறகு, நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையானை , திருமலையில் இருந்து பாதையாத்திரையாக சென்று தரிசிக்க அலிபிரி பாதையில் நடக்க தொடங்கினார். நேற்று முன்தினம் இரவு தங்கி பின்னர் பாதை யாத்திரை மேற்கொண்டு நேற்று காலை தனது 2 மகள்களான ஆத்யா, ஃபலீனா அஞ்சனி ஆகியோருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார் பவன் கல்யாண்.
அப்போது தனது இரண்டாவது மகள் ஃபலீனா அஞ்சனி திருப்பதி தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட்டார். அவர் மைனர் என்பதால் தந்தை பவன் கல்யாணம் உடன் கையெழுத்திட்டார். அதாவது, பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஸ்னேவா கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் அதனால், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் 2வது மகள் ஃபலீனா அஞ்சனி திருப்பதி தேவஸ்தாவம் வந்து தரிசித்ததால் அவர் அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
திருப்பதி தேவஸ்தான விதிமுறை 136-ன் படி வேற்று மதத்தை சார்ந்தவர் திருப்பதி எழுமையனை சந்திக்க வருகை புரிந்தால், அவர்கள் பிராமண பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். அதன்படியே, பவன் கல்யாணின் இரண்டாவது மகள் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளார்.