தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை என ஹிந்தி மொழிக்கு ஆதரவாக ஆந்திரா துணை முதல்வர் பவான் கல்யாண் பேசியதற்கு பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் ஹிந்தி திணிப்பு வேண்டாம் என எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில், தமிழ் திரைப்படங்களை இந்தியில் ஏன் டப்பிங் செய்ய வேண்டும்? என ஹிந்தி மொழிக்கு ஆதரவாக ஆந்திரா துணை முதல்வர் பவான் கல்யாண் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.
பவன் கல்யாண், ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, “தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய வேண்டிய அவசியம் என்ன? தமிழ்நாடு அரசியல்வாதிகள் இந்தியை எதிர்க்கிறார்கள், ஆனால் தங்கள் படங்களை பணம் சம்பாதிக்க இந்தியில் எதற்காக டப்பிங் செய்கிறார்கள். இது எந்த வகை லாஜிக் என்று எனக்கு புரியவில்லை. என்னை பொறுத்தவரை இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை, மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும்.
நமது மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். தமிழ் படங்களை இந்தியில் டப் செய்வது, அவர்களின் சொந்த அடையாளத்தை இழக்க செய்யலாம்” எனவும் தெரிவித்தார். இவர் பேசியதற்கு ஒரு பக்கம் எதிர்ப்புகள் கிழம்பியிருக்கும் நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பவான் கல்யாணுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரகாஷ் ராஜ் கூறியதாவது ” “உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்”மற்றொரு மொழியை வெறுப்பது அல்ல, மாறாக “எங்கள் தாய்மொழியையும் நம் தாயையும் பெருமையுடன் பாதுகாப்பது” இதனை யாரவது பவான் கல்யாணுக்கு சொல்லி புரிய வையுங்கள்” என தெரிவித்துள்ளார்.
“మీ హిందీ భాషను మా మీద రుద్దకండి”, అని చెప్పడం ఇంకో భాషను ద్వేషించడం కాదు, “ స్వాభిమానంతో మా మాతృభాషను, మా తల్లిని కాపాడుకోవడం”, అని పవన్ కళ్యాణ్ గారికి ఎవరైనా చెప్పండి please… 🙏🏿🙏🏿🙏🏿 #justasking
— Prakash Raj (@prakashraaj) March 14, 2025