ஆந்திர துணை முதல்வரானார் பவன் கல்யாண்.. நாயுடு மகனுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு.!
ஆந்திரப் பிரதேசம் : ஆந்திராவின் துணை முதல்வராக பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான புதிய அமைச்சரவையின் இலாகாக்கள் செய்யப்பட்டு, அதற்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அம்மாநில துணை முதலமைச்சராக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ள. மேலும், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், அமைச்சரவையில் 3வது இடத்தில் உள்ளார்.
அவருக்கு , மனிதவளம், தகவல் தொழில்நுட்பம், RTG ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ள. நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் அவரது கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.