‘மெய்யழகன்’ கார்த்தியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட பவன் கல்யாண்.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டதற்கு அவரை ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் பாராட்டியுள்ளார்.

pawan kalyan karthi

ஆந்திரா : திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லட்டு தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகிறார்கள். அதில் ‘சிறுத்தை’ படத்தில் தமன்னாவிடம் ‘ஒரு லட்டு வேணுமா, ரெண்டு லட்டு வேணுமா’ என கார்த்தி கேட் கும் வசனத்தையும் மீம்ஸ் செய்து நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள்.

கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படம் தெலுங்கில் ‘சத்யம் சுந்தரம்’ என்ற பெயரில் வெளியாகிறது. ஐதராபாத்தில் நடந்த பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தியிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களுக்கு லட்டு வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த கார்த்தி, ‘லட்டு பற்றி இங்கு பேச வேண்டாம். அது உணர்வுப்பூர்வ விஷயம். லட்டு வேண்டாம். தவிர்த்து விடுவோம்’ என்றார். இதை கேட்டு பலரும் சிரித்தனர். இதையடுத்து, கார்த்தி கருத்துக்கு தெலுங்கு நடிகரும், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார்.

திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்காக 11 நாள் விரதம் மேற்கொண்டுள்ள பவன் கல்யாண் கூறும்போது, “சினிமா விழாவில் லட்டுவை கிண்டலடிப்பதா? லட்டு உணர்ச்சி மிக்க விஷயம் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். நடிகராக உங்களுக்கு மரியாதை கொடுக்கிறேன். சனாதன தர்மம் என வரும்போது நூறுமுறை யோசித்து பேச வேண்டும்” என்றார். இது பரபரப்பானது.

 

இதையடுத்து கார்த்தி தனது சமுக வலைதளத்தில், “மரியாதைக்குரிய  பவன்கல்யாண் அவர்களே எதிர்பாராத தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேச பெருமாளின் தாழ்மையான பக்தன் என்ற முறையில் நான் மரபுகளை பின் பற்றி நடக்கிறேன்” என்று கூறினார்.

திருப்பதி லட்டு விவகாரத்தில் தன்னுடைய பேச்சு தொடர்பாக நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்த நிலையில், அவரை பாராட்டி நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கார்த்தி உடனடியாக ரியாக்ட் செய்ததை பாராட்டியதோடு ‘மெய்யழகன்’ படத்திற்கும் சூர்யா உள்ளிட்டோரை டேக் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து,பாராட்டிய பவன் கல்யாண்க்கு நடிகர்கள் கார்த்தி, சூர்யா நன்றி தெரிவித்தனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்