பட்னாவிஸ் எந்த முடிவும் எடுக்கக் கூடாது ! பரபரப்பான மகாராஷ்டிரா அரசியலில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
உச்சநீதிமன்றத்தில் சிவசேனா புதிய மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனால் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும் தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இந்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் தற்போது புதிய மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதாவது உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த புதிய மனுவில் , நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை பட்னாவிஸ் எந்த கொள்கை முடிவும் எடுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்ற பட்னாவிஸ் நேற்று விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.