வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு பத்து நாட்களுக்கு பின்பு எந்த ஒரு அறிகுறியும் இல்லாவிட்டால் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டாம் என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி சுமை மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா நோயாளிகளுக்கான திருத்தப்பட்ட சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளது என வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நோயாளிகள் பத்து நாட்களுக்கு பின்பு காய்ச்சல் அல்லது சுவாசம் சம்மந்தப்பட்ட எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்றால் மீண்டும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட அறைக்குள்ளேயே 94% ஆக்சிஜன் செறிவு உள்ளதாகவும் லேசான அறிகுறிக்காக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் லேசான மூச்சுத்திணறல் மற்றும் சுவாச கோளாறு அறிகுறிகள் மற்றும் காய்ச்சல் உள்ள நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நோயாளிகளுடன் இருப்பதற்கு ஒரு பராமரிப்பாளர் நிச்சயம் வேண்டும் எனவும், இந்த பராமரிப்பாளர்களுக்கும் மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடைபெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் உள்ள நோயாளிகள் மருத்துவ அதிகாரியின் சரியான பரிந்துரைக்கு பின்பு மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நோயாளிகள் சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவருடன் தொடர்பு இருக்க வேண்டும் எனவும், உடல்நிலை மோசம் அடையும் பொழுது மருத்துவருக்கு இது குறித்து அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவு காய்ச்சல் ஏற்படுவதாக தோன்றினால் ஒரு நாளைக்கு நான்கு முறை 650 மில்லிகிராம் பாரசிடமோல் மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…