வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு எந்த அறிகுறியும் இல்லாவிட்டால் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டாம் – இந்திய சுகாதார அமைச்சகம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு பத்து நாட்களுக்கு பின்பு எந்த ஒரு அறிகுறியும் இல்லாவிட்டால் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டாம் என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி சுமை மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா நோயாளிகளுக்கான திருத்தப்பட்ட சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளது என வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நோயாளிகள் பத்து நாட்களுக்கு பின்பு காய்ச்சல் அல்லது சுவாசம் சம்மந்தப்பட்ட எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்றால் மீண்டும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட அறைக்குள்ளேயே 94% ஆக்சிஜன் செறிவு உள்ளதாகவும் லேசான அறிகுறிக்காக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் லேசான மூச்சுத்திணறல் மற்றும் சுவாச கோளாறு அறிகுறிகள் மற்றும் காய்ச்சல் உள்ள நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நோயாளிகளுடன் இருப்பதற்கு ஒரு பராமரிப்பாளர் நிச்சயம் வேண்டும் எனவும், இந்த பராமரிப்பாளர்களுக்கும் மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடைபெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் உள்ள நோயாளிகள் மருத்துவ அதிகாரியின் சரியான பரிந்துரைக்கு பின்பு மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நோயாளிகள் சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவருடன் தொடர்பு இருக்க வேண்டும் எனவும், உடல்நிலை மோசம் அடையும் பொழுது மருத்துவருக்கு இது குறித்து அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவு காய்ச்சல் ஏற்படுவதாக தோன்றினால் ஒரு நாளைக்கு நான்கு முறை 650 மில்லிகிராம் பாரசிடமோல் மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…
February 12, 2025![Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jasprit-Bumrah-Varun-chakaravarthy-Yashasvi-jaiswal.webp)
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)