ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் நோயாளி ஒருவர் பலி..!

Published by
murugan

ஹைதராபாத்தில் ஜில்லேலாகுடா பகுதியை சார்ந்த செக்காலா ஆனந்த் (54)இவர் வேலையை முடித்து விட்டு தினமும் லோக்கல் ரயிலில் தனது வீட்டிற்கு செல்வது வழக்கம்.இந்நிலையில் நேற்று இரவும் லோக்கல் ரயிலில்  பயணம் செய்து தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது செக்காலா ஆனந்த்விற்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.

அப்போது ரயிலில் இருந்த சக பயணிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இதை தொடந்து ரயில் மாலாக்பெட் நிலையத்தை வந்து அடைந்ததும் தயாராக ஆம்புலன்ஸ் இருந்தது.

பின்னர் உடனடியாக செக்காலா ஆனந்த்தை சக பயணிகள்  தூக்கி கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஆம்புலன்ஸ் கதவு திறக்க முடியாமல் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 15 நிமிடம் போராட்டத்திற்கு பிறகு கதவு திறந்தனர்.

ஆனால் கதவு திறப்பதற்கு முன்பாகவே செக்காலா ஆனந்த் உயிர் பிரிந்தது.இதனை தொடந்து அங்கு வந்த  ஆனந்த் குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாகனத்தை சரியாக பராமரிக்காமல் இருந்ததால் ஆனந்த் இறந்து விட்டார் என கூறினார்.

செக்காலா ஆனந்த் உயிரை காப்பாற்றும் என ஆம்புலன்ஸ் வரவைத்தனர். ஆனால் கடைசியில் ஆனந்த் உயிரை ஆம்புலன்ஸ் பறித்து விட்டது என பலர்  கூறினர்.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago