“ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்புக்கு வேறு நிறுவனம் முன்வரவில்லை என்றால் பதஞ்சலி முன் வரும்”- பாபா ராம்தேவ்!
இந்தாண்டு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்புக்கு எந்தொரு நிறுவனமும் முன்வரவில்லை என்றால் மட்டுமே பதஞ்சலி முன் வரும் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் விவோ ஸ்பான்சர்ஷிப்பை தற்காலிகமாக பிசிசிஐ நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக ஐ.பி.எல் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக பி.சி.சி.ஐ தெரிவிக்கவில்லை.
இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸர்களை தேடுவதாக பிசிசிஐ தரப்பிலிருந்து செய்திகள் வெளியான நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், அண்மையில் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸராக இருக்க விரும்புகிறோம் என தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பாபா ராம்தேவ் கூறுகையில், இந்தாண்டு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்புக்கு வேறு எந்தொரு இந்திய நிறுவனமும் முன்வரவில்லை என்றால் மட்டுமே பதஞ்சலி முன் வரும் என தெரிவித்தார். மேலும், சீன நிறுவங்கள், இந்திய சந்தையை ஆக்கிரமிக்க ஒருபோதும் விடமாட்டேன் என கூறிய அவர், ஐபிஎல் ஸ்பான்ஸராக இருக்க விரும்புவதாக பிசிசிஐயிடம் எதுவும் தெரிவிக்கவில்லை றன தெரிவித்தார்.