கொரோனா வைரஸை குணப்படுத்த..ஆயுர்வேத மருந்தை வெளியிட்ட பதஞ்சலி.!
கொரோனா வைரஸை குணப்படுத்த ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி இன்று மதியம் 12 மணிக்கு வெளியானது.
உலகளவில் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலகளவில் பரவத் தொடங்கியது. இந்நிலையில் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகளில் அனைவரும் அதை கட்டுப்படுத்த மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி இன்று ஹரித்வாரில் உள்ளபதஞ்சலி யோக பீத்தில் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது . பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருந்து கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்திற்கு “Coronil” என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது.
Launch of first and foremost evidence-based ayurvedic medicine for Covid-19@yogrishiramdev @Ach_Balkrishna #Patanjali #आयुर्वेदविजय_कोरोनिल_श्वासारि pic.twitter.com/sjSWq5X0vS
— Patanjali Dairy (@PatanjaliDairy) June 23, 2020
உலகளவில் பாதித்தோரின் எண்ணிக்கை 91,85,974ஆக உயர்ந்துள்ளது; அதே போல வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49,21,380ஆக உயர்ந்துள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,74,257ஆக உயர்ந்துள்ளது.