இந்திய மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர் தொகையை வழங்கியதாக ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை வெல்ல பெரும் ஆயுதமாக தடுப்பூசியே உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ், இந்திய மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர் தொகையை வழங்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியர்கள் பலரும் கொரோனாவால் பாதிப்பட்டுள்ளது, சோகத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக நான் பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.37,36,077 லட்சம்) வழங்குகிறேன். மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடும் இதர வீரர்களும் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…