பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து ட்வீட்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிறப்பான பங்களிப்பை தேவர் ஜெயந்தியின் சிறப்பு நாளில் நினைவு கூர்கிறேன்.
முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் மிகவும் துணிச்சலான மற்றும் கனிவான உள்ளம் கொண்ட அவர், பொது நலன் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர் என்று புகழாரம் சசூட்டியுள்ளார்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…