கன்னியாஸ்திரி அபயா கொலை விவகாரத்தில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனில் குமார், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா. இவர் அங்குள்ள பிஎம்சி கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் தனது படிப்புக்காக செயின் பயஸ் கான்வென்டில் தங்கியிருந்துள்ளார். இதனை அடுத்து, இவர் கடந்த 1992-ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி இந்த கான்வென்ட் வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றில் அபயா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
முதலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் கோட்டையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த சிபிஐ குழு நடத்திய விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலையாளிகளை கண்டறிய சிபிஐ குழு அமைக்கப்பட்ட நிலையில், அபயாவை பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததை கண்டுபிடிக்கப்பட்டது. பாதிரியார்களுக்கும் கன்னியாஸ்திரி செபிக்கும் தகாத உறவு இருந்துள்ள நிலையில், இதை ஒருமுறை அபியா நேரில் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது.
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…