பாஸ்போர்ட் அப்ளை செய்யணுமா.? அடுத்த 5 நாட்கள் முடியவே முடியாது.!
டெல்லி : இன்று முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரையில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் அரசு சேவை இணையதளம் பராமரிப்பு காரணங்களால் மூடப்படுகிறது.
இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் முக்கிய அடையாள அட்டையாக பாஸ்போர்ட் எனும் கடவு சீட்டு உள்ளது. இந்த பாஸ்போர்ட் பெற ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன் மூலம் அப்பாய்ண்ட்மென்ட் (முன்குறிப்பிட்ட தேதி) பதிவு செய்து அந்த தேதியில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.
இப்படியான சூழலில் பாஸ்போர்ட் சேவை இணையதளம் பராமரிப்பு கரணங்கள் காரணமாக 5 நாட்கள் மூடப்படுவதாக பாஸ்போர்ட் சேவை தளம் அறிவித்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 29) இரவு 8 மணி முதல் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி, காலை 6 மணி வரையில் பாஸ்போர்ட் சேவா இணையதளம் செயல்படாது.
மேலும், மேற்குறிப்பிட்ட தேதிகளில் ஏற்கனவே புக் செய்யப்பட்ட அப்பாய்ண்ட்மென்ட்கள் வேறு தேதிக்கு மாற்றப்படும் என்றும், பாஸ்போர்ட் சேவை மூலம் மேற்கொள்ளப்படும் மேலும் பல்வேறு சேவைகளும் 5 நாட்கள் மட்டும் நிறுத்தப்படுவதாக பாஸ்போர்ட் சேவை தளம் அறிவித்துள்ளது.
வழக்கமான நடைமுறை :
வழக்கமாக பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அப்பாயிண்ட்மெண்ட் பெற வேண்டும். அந்த குறிப்பிட்ட தேதியில் பயனர்கள் வந்து தங்கள் ஒரிஜினல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் ஒப்புதல் கையெழுத்துக்கள் பெற்ற பின்னர் பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும்.
அதன்பிறகு, விண்ணப்பதாரர்களின் இருப்பிடதிற்கு அருகே உள்ள காவல்நிலையத்தில் இருந்து ஆய்வுக்கு அழைக்கப்படுவார்கள். காவல்நிலைய சரிபார்ப்புகள் முடிந்த பிறகு 10 நாட்கள் இடைவெளியில் பாஸ்போர்ட் வீட்டிற்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.
இந்த வழக்கமான நடைமுறை மூலம் பாஸ்போர்ட் பெற 15 முதல் 25 நாட்கள் ஆகும். அதனை தவிர்த்து தட்கல் எனும் முறையில் 3 முதல் 5 நாட்களில் விரைவாக பாஸ்போர்ட் பெற முடியும். வழக்கமான நடைமுறைக்கு ரூ.1500 கட்டணமும் , தட்கல் முறைக்கு ரூ.3000 கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது.