கேரளா ரயிலில் பயணிகளுக்கு தீ வைப்பு – மராட்டியத்தில் ஒருவர் கைது

Default Image

கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த விவகாரத்தில், மகாராஷ்டிராவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே, இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் டி1 பெட்டியில் ஓடும் ரயிலில், ஒருவர் சகபயணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

தீ பற்றி எரிவதை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த செய்தனர். அதற்குள் பயத்தில், ரயிலில் இருந்து குதித்த குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில், குற்றவாளியின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

 கேரளா ரயில் தீ விபத்தில் சந்தேகிக்கும் நபர் பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக புலனாய்வு குழு அதிகாரிகள் நொய்டா விரைந்த நிலையில், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

மாராட்டியதில் ஒருவர் கைது 

இதனை தொடர்ந்து, கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த விவகாரத்தில், மகாராஷ்டிராவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்தினகிரியில் மத்திய உளவுத்துறை பிரிவு மற்றும் பயங்கரமாக தடுப்பு படை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்துள்ளனர்.   இதனையடுத்து, இரத்தினகிரிக்கு கேரளா தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்