#BREAKING: பயணிகள் விமானத்திலும் கொரோனா தடுப்பூசி எடுத்து செல்லலாம்..!
பயணிகள் விமானத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அனைத்து மக்களுக்கும் விரைவாக தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுத் தரப்பு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசியை எந்தெந்த வழிகளில் எடுத்துச் செல்லலாம் என மத்திய அரசு ஆலோசனை வந்த நிலையில், இது குறித்து ஏற்கனவே சரக்கு விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக மூலம் எடுத்துச் செல்லலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கூடுதலாக மேலும் பயணிகள் விமானத்தில் இந்த தடுப்புச் எடுத்து செல்லலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜூலை மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு தடுப்புசி வழங்க வேண்டும் என்று இலக்கு உள்ளதால் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. பயணிகள் விமானம் காலியாக உள்ள போது இந்த தடுப்பூசியை எடுத்துச் செல்லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.