ஒரு பெண்ணின் நிர்வாண மேல் உடலைப் பார்ப்பதை ஆபாசமாக கருதக் கூடாது..! கேரள உயர் நீதிமன்றம்
கேரளா ஆர்வலர் ரெஹானா பாத்திமா தனது குழந்தைகள் தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்த வீடியோ தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஒரு பெண்ணின் நிர்வாண மேல் உடலைப் பார்ப்பதை பாலியல் அல்லது ஆபாசமாக கருதக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.