விமானத்தில் பயங்கரவாதி உள்ளதாக பீதியை கிளப்பிய பயணி! அதிர்ச்சியடைந்த சக பயணிகள்!
விமானத்தில் பயங்கரவாதி உள்ளதாக பீதியை கிளப்பிய பயணி.
கோவாவுக்கு, டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த, ஜியா -உல்- ஹக் என்பவர் எழுந்து நின்று, தான் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவின் அதிகாரி என்றும், விமானத்தில் ஒரு பயங்கரவாதி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அந்த விமானத்தில் பயணித்த சக பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இதுகுறித்து, கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து, வதந்தி பரப்பிய அந்த பயணி காவலில் வைக்கப்பட்டார்.
இதுகுறித்து, கோவா காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறையின் கூட்டு குழு விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து, அந்த பயணியின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், அவர் உடல்நிலை இருப்பதாகவும், மனசோர்வு மற்றும் பதற்றத்தால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்கள்.