கர்நாடகா தொகுதி பங்கீடு:10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்!! முன்னாள் பிரதமர் தேவகவுடா
- கர்நாடகா தொகுதி பங்கீடு தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா உடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டார்.
- கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 224 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் 222 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. 2 இடங்கள் காலியாக உள்ளன. தனி்ப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக சார்பில் 104 எம்எல்ஏக்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.
காங்கிரஸூக்கு 78 உறுப்பினர்கள், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 36 உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் உறுப்பினர் ஒருவரும், 2 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். பாஜக சார்பில் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலையில் வெளியேறினார்.
நீண்ட குழப்பத்துக்குப் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதவுடன் முதல்வராக பதவியேற்றார். சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார். பெரும்பான்மைக்கு 111 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவு குமாரசாமிக்கு இருந்தது.
இந்நிலையில் கர்நாடகா தொகுதி பங்கீடு தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா உடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதன் பின்னர் முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறுகையில், கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.