நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்… மத்திய அரசு புதிய முடிவு.!
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது, கடந்த டிசம்பர் 13ஆம் தேதி சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவையில் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் காலணிகளுக்குள் மறைத்து வைத்திருந்த குப்பிகளில் இருந்து மஞ்சள் புகையை மக்களவைக்குள் தெளித்தனர். அவர்களை மக்களவை உறுப்பினர்கள் பிடித்து, பின்னர் பாதுகாவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.
மக்களவையில் நிறைவேறிய முக்கிய ‘தேர்தல்’ சட்ட மசோதா.! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.!
இந்த பாதுகாப்பு மீறல் சம்பவத்தில் சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் உட்பட 6 பேர் கைது செய்ப்பட்டு டெல்லி போலீசார் விசாரணையில் உள்ளனர்.இந்த பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்த கேள்விகளை பலமாக எழுப்பியுள்ளது. மக்களவைக்குள் இருவர் நுழைந்தது எப்படி, தடை செய்யப்பட்ட வண்ண பூச்சிகளை எப்படி வெளிக்கொண்டுவந்தனர் என்பது பற்றியும் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்த பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் , சிஐஎஸ்எஃப் (CSIF) எனும் மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் நாடாளுமன்ற பாதுகாப்பு பொறுப்பை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படையானது தற்போது அணு மற்றும் விண்வெளி களம், சிவில் விமான நிலையங்கள் மற்றும் டெல்லி மெட்ரோ ஆகியவை மற்றும் மத்திய அரசின் பல அமைச்சக கட்டிடங்களுக்கும் பாதுகாப்பை வழங்கி வருகின்றன.