இன்று முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறயுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஜூலை மாதம் கூட நடைபெறவேண்டிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலதாமதாக செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 18 நாட்கள் நடைபெற வேண்டிய கூட்டத்தொடர் 11 நாட்கள் மட்டுமே நடந்தது.
பின்னர், டிசம்பர் மாதம் நடைபெறவேண்டிய குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு காரணங்களுக்காக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் நடைப்பெற்றது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மேகதாது, நீட் தேர்வு உள்ளிட்ட 13 பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.