மக்களவை தேர்தல் : நாடுளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பெருவாரியான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர்களின் கள நிலவரத்தை பற்றி பாப்போம்.
அமித் ஷா : குஜராத் மக்களவை தொகுதியான காந்திநகரில் பாஜக சார்பாக போட்டியிட்ட இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா 8,58,197 வாக்குகள் பெற்று 6,50,399 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சோனல் ராமன்பாய் படேலை விட முன்னிலை பெற்று வருகிறார்.
ராஜ்நாத் சிங் : உத்தரபிரதேச மக்களவை தொகுதியான லக்னோவில் பாஜக சார்பில் போட்டியிட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சரான ராஜநாத் சிங் 2,78,873 வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட சமஜ்வாதி கட்சியின் ரவிதாஸ் மெஹ்ரோத்ராவை (2,34,028 வாக்குக்கள்) விட 4,4845 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
ஸ்மிருதி இரானி : உத்திர பிரதேசம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி சுமார் 2,56,811 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். முதலிடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் 3,59,647 வாக்குகள் பெற்று 1,02,836 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பியூஸ் கோயல் : மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான பியூஷ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ள நிலையில், 4,13,438 வாக்குகள் பெற்று முதலிடம் வகிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட பூஷன் பாட்டீல் 1,94,839 வாக்குகள் பெற்று 2,18,599 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் இருக்கிறார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…