பேஸ்பேக் & ட்விட்டர்க்கு நாடாளுமன்றக் குழு நோட்டீஸ்..!
தனிநபர் மற்றும் தரவுகள் பாதுகாப்பு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பேஷ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு நோட்டீஸ்
அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற அனுப்பிய நோட்டீஸில் கூறியுள்ளதாவது:
(தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2019 ) குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் பேஸ்புக் நிறுவனத்தின் சாரிவில் இந்திய பிரதிநிதிக இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இதே போல ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகிகள் அக்.,28ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
(தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2019 ) என்பது இந்தியாவில் பதியப்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைக் கையாளுகின்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இம்மூன்றும் தனிநபர் சார்ந்த தகவல்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற விதிமுறைகளை இச்சட்ட மசோதா வரையறுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.