நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் – பிரதமர் மோடி
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என பிரதமர் மோடி பேட்டி.
டெல்லியில் இன்று பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த, பிரதமர் மோடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாராளுமன்றத்தில் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், தேவைப்பட்டால் விவாதம் நடத்த வேண்டும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆழ்ந்து சிந்தித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.