இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெற இருக்கிறது.  

Parliament Winter Session

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணி அளவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெற இருக்கிறது.

இன்று நடைபெறவிருக்கும் இந்த கூட்டத் தொடரில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோதா, வங்கி சட்டங்கள் உள்பட 16மசோதாக்களை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு முக்கிய பிரச்னைகளை கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன. குறிப்பாக, அதானி விவகாரம் அவையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 30 கட்சிகளின் 42 தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைக்குமாறு அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தினார். மேலும், மணிப்பூர் வன்முறை, அதானி லஞ்ச விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், இன்று காலை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, இந்தியா கூட்டணி ஒரு சிறிய கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகார்ஜுன் கார்கே அலுவலகத்தில் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடருக்கான வியூகம் வகுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகா கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததையடுத்தும், ஜார்க்கண்டில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதன் பின்னணியிலும் இந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்