எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 11வது நாளாக முடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2023: இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது, அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள், சபாநாயகர் ஓம் பிர்லா மேஜை மீது காகித துண்டுகளை வீசி அமளியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் அமளியாலும் மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது, ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து வந்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், மோடி என்ற குடும்பப் பெயர் குறித்து அவதூறாக பேசிய ராகுல் மன்னிப்பு கேட்கக் கோரி பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பினர். இந்நிலையில், இரு தரப்பு அமளியால் இரு அவையும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 11வது நாளாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியிலும், பட்ஜெட் விவாதமின்றி நிறைவேறியது.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…