மூன்றாவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்.. 144 தடை உத்தரவு அமல்!
நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல்.
நாடாளுமன்றத்தில் அமளி:
அதானி குழும முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். மறுபக்கம், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் ஒருபக்கம் தொடர் அமளியில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தால் 3-ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தால் மக்களவையில் முழக்கங்களை எழுப்பினர்.
அவை ஒத்திவைப்பு:
இன்று நாடாளுமன்ற மக்களவை முடங்கிய சில நிமிடங்கலேயே மாநிலங்களவையும் முடங்கியது. ஆன்லைன் ரம்மி தடை சட்டம், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
144 தடை உத்தரவு:
இந்த நிலையில், நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சியினர் அமலாக்கத்துறை அலுவலகம் வரை பேரணியாக செல்லவிருந்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் வெளியில் உள்ள சாலையில் முன்னெச்சரிக்கையாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தடையை மீறி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி சென்றால் கைது செய்யவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் பேரணி:
இதனிடையே, டெல்லி எதிர்க்கட்சிகள் பேரணி செல்ல உள்ள நிலையில், நாடாளுமன்றம் வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்கட்சிகளை மத்திய அரசு முடக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றசாட்டு வைத்துள்ளது. மதியம் 12.30 மணி அளவில் 18 எதிர்க்கட்சி தலைவர்கள் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்கின்றனர்.