ஜூலை 23இல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! கூட்டத்தொடர் விவரம் இதோ…
டெல்லி: வரும் ஜூலை 23ஆம் தேதி 2024- 2025ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து இருந்தார். மக்களவை தேர்தலை அடுத்து மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டது. மீண்டும் நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக நியமிக்கபட்டர்.
இதனை அடுத்து 2024 -2025ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டானது வரும் ஜூலை 23இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது என்றும், இதற்காக நாடளுமன்றத்தை கூட்டுவதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார் என அறிவித்துள்ளார்.