இன்றைய சுய ஊரடங்கால் நாளை நாடாளுமன்றம் வழக்கத்திற்கு மாறாக கூடுகிறது .!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடுவது எப்போது வழக்கம். ஆனால் நாளை பகல் 2 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எம்.பிகள் தங்கள் தொகுதியில் இருந்து டெல்லி வர முடியாது எனக் கூறிய தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என மோடி அறிவித்த நிலையில் ரயில்கள், பேருந்துகள் காலை முதல் இரவு வரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நாளை மக்களவையில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்.