Parliament adjourned until July 1 [file image]
டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், முதல் 2 நாட்கள் எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து புதன்கிழமை அன்று மக்களவை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. நேற்றைய நாளில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.
அதில் பல திட்டங்களை அவர் முன்மொழிந்தார். அதன்பின் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. இதைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஒத்திவைத்து நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரினர். அவர்களின் கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 12 மணி வரையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின் மீண்டும் 12 மணிக்கு இரு அவையும் கூடியபோது, அப்போதும், இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் நீட் விவகாரம் குறித்து கோஷங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து, மக்களவையை திங்கள்கிழமை (ஜூலை 1) வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…