மூத்த மகளின் சிகிக்சைக்காக இளைய மகளை ரூ.10,000-க்கு 45வயதான நபருக்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் தனது 12 வயது மகளை 46 வயதான பக்கத்து வீட்டில் வசிக்கும் சின்ன சுப்பையா என்பவருக்கு ரூ.10,000 -க்கு விற்றுள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவாச நோயால் பாதிக்கப்பட்ட தனது மூத்த மகளின் மருத்துவ சிகிச்சைக்காக அயல்வரான சின்னா சுப்பையாவிடம் இந்த தம்பதியினர் ரூ.25,000 கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் சுப்பையா இந்த தம்பதியினரின் இரண்டாவது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்பியதால் ரூ.10,000 கொடுக்க ஒப்பு கொண்டுள்ளார்.அதன் பின் அந்த தம்பதியினர் தனது இரண்டாவது மகளை மூத்த மகளின் சிகிக்சைக்காக ரூ.10,000-க்கு விற்றுள்ளனர் . அதன்பின் கடந்த புதன்கிழமை சுப்பையா 12 வயது மைனர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு தம்பூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கே அந்த சிறுமியின் அழு குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் குழந்தை மேம்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்க அவர்கள் சிறுமியை மீட்டு மாவட்ட குழந்தை சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டார் .ஒரு குழந்தைக்காக மற்றொரு குழந்தையை விற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…
சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது…
டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…