வயது குறைவு என ஓடிச்சென்ற காதலர்களை பிரித்த பெற்றோர்கள் – காதலனால் கொலை செய்யப்பட்ட காதலி!

ஆந்திராவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை வயது குறைவு காரணமாக பெற்றோர்கள் பிரித்து வைக்கவே மீண்டும் பெற்றோர்களை விட்டு வருமாறு காதலியை வற்புறுத்தப்பட்டும், அவர் வராததால் காதலனால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம் கங்காதநல்லூர் பகுதியில் வசித்து வரக்கூடிய காயத்ரி என்பவர் டில்லிபாபு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் வயது குறைவாக இருந்துள்ளது. டெல்லி பாபுவுக்கு இருபத்தி ஒரு வயது கூட ஆகவில்லை. இந்நிலையில் இருவரையும் காணவில்லை என இரு குடும்பத்தாரும் அளித்த புகாரின் அடிப்படையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருதரப்பிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது டில்லிபாபு வயது குறைவாக இருந்ததால் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் பின்பதாக திருமணத்தை பார்த்துக்கொள்ளலாம் தற்பொழுது வீட்டிற்கு வாருங்கள் என்றுஅழைத்து சென்றுள்ளனர். வயது குறைவாக இருப்பதால் தான் இவ்வாறு கூறுகிறார்கள் என்பதை கூட ஏற்றுக் கொள்ளாமல் டில்லிபாபு காயத்ரியிடம் மீண்டும் வா சென்று விடலாம் என வற்புறுத்தியுள்ளார். ஆனால் பெற்றோர்களை மீறி காயத்ரி வரமுடியாமல் மறுக்கவே நேரில் சென்ற டில்லிபாபு காயத்ரியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். காதலித்த பெண்ணை காதலனே கொலை செய்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025