மூடநம்பிக்கையால் இரு மகள்களை கொன்ற பெற்றோர்கள்..!

ஆந்திராவில் பெற்றோர்கள் மூடநம்பிக்கை மற்றும் அதிக பக்தி காரணமாக இரண்டு மகள்களை கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் நேற்று இரவு தேசிய பெண் குழந்தை தினத்தில் நடந்தது.
மத்தனப்பள்ளி நகரில் உள்ள ஆசிரியர் காலனி சிவநகரில் புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மாஜா ஆகியோருடன் இவர்களின் 2 மகளும் வசித்து வந்தனர். புருஷோத்தம் நாயுடு மகளிர் பட்டம் கல்லூரியில் துணை முதல்வராகவும், பத்மஜா மாஸ்டர் மைண்ட் பள்ளியின் முதல்வராகவும் உள்ளனர். இவர்களுக்கு அலெக்கியா (27), திவ்யா (22) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
நேற்று இவர்கள் வீட்டில் சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கிடையில், உடற்பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் டம்பல்ஸை பயன்படுத்தி இரண்டு மகள்களையும் பெற்றோர்கள் இருவரும் கொடூரமாக கொலை செய்தனர். அப்போது அலறல் சத்தம் கேட்டு, உள்ளூர் வாசிகள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அலெக்கியா மற்றும் திவ்யா இருவரும் நிர்வாணமாக கொல்லப்பட்டதைக் கண்டனர்.
இந்த சம்பவம் குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தை அடைந்து புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா ஆகியோரை கைது செய்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், ஆன்மீகத்தில் கொண்ட அதீத ஈடுபட்டால், மூடநம்பிக்கையில் இதுபோன்று கொடூர செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025