குழந்தையோடு வந்த மகளை அடித்து கொன்ற பெற்றோர்!திடுக்கிடும் தகவல்!

ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் பாஸ்கர் நாயுடு வரலட்சுமி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.இவருக்கு ஹேமாவதி என்ற மகள் இருந்துள்ளார்.ஹேமாவதியை அவர் பெற்றோர் இருவரும் செல்லமாக வளர்த்துள்ளனர்.
திருமண வயது வந்தவுடன் ஹேமாவதிக்கு வேறு சாதியை சேர்ந்த கேசவலு மீது ஆசை ஏற்பட்டுள்ளது.கேசவலு தலித் சமூதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஹேமாவதியின் பெற்றோர் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
அந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஊரை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டனர்.மேலும் வெளியூரில் யாருக்கும் தெரியாமல் வசித்து வந்த இருவருக்கும் குழந்தை கரு உருவாகியுள்ளது.
குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் மனம் இறங்கிவிடுவார் என்றும் தமக்கு வளைகாப்பு செய்து வைப்பார் என்று ஹேமாவதி எண்ணியுள்ளார். இந்நிலையில் குழந்தை பிறக்கும் நாள் நெருங்கியுள்ளது.
ஹேமாவதியை பார்க்க ஆசைப்பட்ட அவரின் பெற்றோர் இருவரையும் சொந்த ஊருக்கு வரவழைத்துள்ளனர்.தங்களின் வீட்டில் இருந்த நிலையில் ஹேமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது ஹேமாவதி பிரசவத்திற்காக பலமனேரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்த விஷயம் ஹேமாவதியின் பெற்றோருக்கு தெரியவந்தவுடன் தங்களை அசிங்கபடுத்திய இருவரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளனர்.
நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஆட்டோவை திடீரென்று ஒரு கும்பல் வழிமறித்துள்ளது.அது யார் என்று ஹேமாவதி பார்த்த போது அவரின் தந்தையும் உறவினரும் நின்றுகொண்டிருந்துள்ளனர்.தம்மை அழைத்து செல்ல வந்துள்ளனர் என்று ஹேமாவதி நினைத்துள்ளார்.
ஆனால் அவர்கள் ஆட்டோவில் இருந்த இருவரையும் வெளியே இழுத்து போட்டு அடித்துள்ளனர்.பச்சை உடம்பு காரி என்று கூட மாறாமல் அடித்து கொன்று கால்வாயில் வீசி சென்றுள்ளனர்.பிஞ்சு குழந்தை என்று கூட பாராமல் வீசி எரிந்து சென்றுள்ளனர்.
காவல் துறையினருக்கு சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.இதை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு ஹேமாவதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்நிலையில் மகளுக்கு குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் அடித்து கொன்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025