அதிகாரிகளின் பரிந்துரையின் பெயரில் ஊரடங்கில் பிறந்த குழந்தைக்கு லாக்டவுன் என பெயர்சூட்டிய பெற்றோர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவும் நாட்களில் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ், மற்றும் ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு பல வித்தியாசமான பெயர்களை சூட்டியுள்ளனர்.
அந்த வகையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக திரிபுராவில் சிக்கிக்கொண்ட ராஜஸ்தானை சேர்ந்த சஞ்சய் பவுரி மற்றும் அவரது மனைவி மஞ்சு பவுரி தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து, இந்த குழந்தைக்கு அதிகாரிகளின் பரிந்துரையின் பெயரில் ‘லாக்டவுன்’ என்று பெயர் வைத்துள்ளனர்.
ஏற்கனவே, ஊரடங்கு நாட்களில் பிறந்துள்ள குழந்தைகளுக்கு, கொரோனா, கொரோனா குமார், கொரோனா குமாரி மற்றும் லாக்டவுன் என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…