ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் துர்கஷாசனம் கிராமத்தில் வசித்து வருபவர் காவியா. இவருக்கு ஹேமஸ்ரீ என்ற 11 மாத குழந்தையும் நிர்மலா என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளனர். மேலும் கவியாவிற்கு இரண்டாவது மகள் பிறந்த உடன் அவர் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததை கண்ட நிர்மலா கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் காவியா தனது 11 மாத குழந்தையை பக்கத்து வீட்டில் தூங்கவைத்துள்ளார், பிறகு சிறிது நேரம் கழித்து குழந்தையை காண சென்ற காவியா அங்கு குழந்தை இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து குழந்தை ஹேமஸ்ரீயை வீடு முழுவது தேடியுள்ளார்.
பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தைக்கிடைக்கவில்லை.
மேலும் குழந்தையின் சடலம் வீட்டின் மேல் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து மீட்டனர். மேலும் இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஹேமாவின் தங்கை நிர்மலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன் தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததால் அது பிடிக்கவில்லை என்பதால் தனது தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டேன் என்று அப்பாவியாக கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் சிறுமி நிர்மலாவின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…