பாராகிளைடிங் செய்யும் போது 50 அடி உயரத்திலிருந்து விழுந்த கொரிய நாட்டை சேர்ந்தவர் உயிரிழப்பு
குஜராத்தின் மெஹ்சானாவில் 50 வயது தென் கொரிய நபர் ஒருவர் பாராகிளைடிங் செய்யும் போது விபத்துக்குள்ளாகும் காட்சி வீடியோவில் வெளியாகியுள்ளது.
ஷின் பியோங் மூனின் பயன்படுத்திய பாராகிளைடர் சரியாக திறக்கப்படாமல் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் இந்த விபத்து நடந்ததாக போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார்.
மூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.