இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில், அவர் இன்று தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும். வழக்கமாக பட்ஜெட் தாக்கல் பெட்டியினுள் வைத்து பட்ஜெட் தாள் கொண்டுவரப்படும். ஆனால் கடந்த முறை சிவப்பு நிறத் துணி கோப்பில் நிதியமைச்சர் பட்ஜெட் தாள்களை எடுத்து வந்தார்.
அதேபோல இந்த முறையும் வித்தியாசமாக முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக காகிதமில்லா முறையில் டிஜிட்டல் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யும் அனைத்து தகவலையும் தெரிந்துகொள்ள பட்ஜெட் மொபைல் ஆப் என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…