கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய ராம்தேவ் மீது கிரிமினல் நடவடிக்கை கோரி பீகாரில் வழக்கு பதியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதஞ்சலி நிறுவனம் அண்மையில் ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, கொரோனா நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது.கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து 100 சதவிகிதம் குணமடைய வைக்கும் ஆயுர்வேத மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக கூறியது பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம்.மேலும் இதுகுறித்து உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் செய்தியாளர்களைச் சந்தித்த பதஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவ் கூறுகையில்:
திடீரென்று உத்தரவு அமைச்சகத்திடம் வந்ததை அடுத்து மூச்சி இரைக்க ட்விட்டருக்கு ஓடி வந்த அதன் தலைமை செயல் அதிகாரியான ஆச்சார்ய பாலகிருஷ்ணா எங்கள் மருந்து தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அளித்துள்ளதாகவும், தகவல் தொடர்பு இடைவெளி தற்போது நிரப்பப்பட்டுள்ளதாகவும், ஆயுர்வேத மருத்துவத்துக்கு ஊக்கத்தையும் பெருமையையும் இந்த அரசு வழங்கியுள்ளது என்றும் டுவிட்டரில் தெரிவித்தார்.
இதற்கிடையில் இவர் இவ்வாறு தெரிவிக்க இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலோ பதஞ்சலி நிறுவனத்தால் கூறப்பட்ட மருத்துவ ஆய்வுகள் குறித்த தகவல்கள் பற்றி அமைச்சகத்திற்கு எதுவும் தெரியவில்லை என்று கூறி மேலும் நழுவியது.மேலும் கொரோனாவை குணப்படுத்தும் எனக் கோரப்பட்ட மருந்தின் பெயர், கலவை, இந்த ஆய்வு நடத்தப்பட்ட இடங்கள், மருத்துவமனைகள், எத்தனை பேரிடம் பரிசோதிக்கப்பட்டன என்ற விவரங்கள், நிறுவன நெறிமுறை குழு அனுமதி, இந்திய மருத்துவ பரிசோதனைகள் பதிவின் அனுமதி, ஆய்வின் முடிவுகள் ஆகியவற்றை பதஞ்சலி நிறுவனம் உடனடியாக அதனை தெரிவிக்க வேண்டும் என்று ராம்தேவ் நிறுவனத்திற்கு ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது குறித்து மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறுகையில் மருந்தை வழங்கியிருப்பது ஒரு “நல்ல விஷயம்” ஆனால் அதற்கு அவரது ஆயுஷ் அமைச்சகத்தின் சரியான அனுமதி தேவை என்று கூறினார்.இந்நிலையில் தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய ராம்தேவ் மீது கிரிமினல் நடவடிக்கை கோரி பீகாரில் வழக்கு பதியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…